வடமேல் மாகாணத்தில் பிறந்து வளர்ந்த  எனக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ, வடமேல் மாகாண முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் எனக்கு சவால் விடமாட்டார் என ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று குருநாகலில் இதனை தெரிவித்தார்.

குருநாகலில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட பின்னர் இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு யோஷித ராஜபக்ச போட்டியிடுவார் என்ற வதந்தி மட்டுமே உள்ளது என்றும் அவர் போட்டியிடுவதா இல்லையா என்பது அப்போது முடிவு செய்யப்படும் என்றும் தயாசிறி ஜெயசேகர கூறினார்.

அமைச்சர் இதனை கூறியதாக lankadeepa.lk தெரிவிக்கிறது.

"வடமேல் மாகாணத்தில் பிறந்த எனக்கு அது சவால் அல்ல. வடமேல் மாகாண மக்கள் அன்றும் இன்றும் என்னை நன்றாக அறிவார்கள். எனவே, இந்த மாகாண சபைத் தேர்தலிலும் வடமேல் மாகாண மக்கள் என்னை நன்றாக நடத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.

நாட்டில் எழுந்துள்ள உரப் பிரச்சனை என்னை பாதிக்கவில்லை. ஏனென்றால் கிராமத்தில் வாழும் விவசாயிகளுக்கு என்னை நன்றாக தெரியும். இந்த தயாசிறி ஜெயசேகர மற்றவர்களைப் போல கிராமத்திற்குச் செல்லும் நிலையில் இல்லை. நான் எப்போதும் கிராம மக்களுடன் இருந்தேன். நான் கிராமத்து மக்களுடன் தொடர்ந்து இருப்பேன்.

கரிம உரப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், அது ஜனாதிபதியையும் இந்த அரசாங்கத்தையும் அழிக்கும் பிரச்சினையாக மாறும் என்றும் அமைச்சர் ஜெயசேகர கூறினார்.

எனினும், இப்போது செய்தியாக மாறியுள்ள இச்சம்பவம் குறித்து ரோஹித ராஜபக்ச, சமீபத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பொது அரசியலில் நுழையும் எண்ணம் இப்போது இல்லை என்று கூறினார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி