Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள 400 ஏக்கர் காணியை பௌத்த பூமியாக சுவீகரிக்க நடவடிக்கை!

T

The Leader Desk

மார்ச் 23, 2021 • 7:18 AM

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள 400 ஏக்கர் காணியை பௌத்த பூமியாக சுவீகரிக்க நடவடிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குருந்தூர்மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்து மூலமாக அறிவித்துள்ளது.
  • முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில், 1932 ஆண்டு உறுதியின்படி- தொல்பொருள் என்ற பெயரிலான வரைபடம் ஒன்றின் படி- 78 ஏக்கர் காணி வழிபாட்டிடம் ஒன்றிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
  • இதன்படி கொழும்பிலிருந்து வருகைதந்த நில அளவையாளரால் கடந்த வருட இறுதி பகுதியில் இப்பிரதேசம் அளவீடு செய்யப்பட்டு குருந்தாவ விகாரை தொல்லியல் பிரதேசம் என குறிப்பிட்டு 78 ஏக்கர் வரைபடத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
  • இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 18 ஆம் திகதி இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து தொல்லியல் ஆய்வு பணிகளை குருந்தூர் மலையில் ஆரம்பித்திருந்தனர்.
எழுத்து அளவு:

குருந்தூர்மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்து மூலமாக அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில், 1932 ஆண்டு உறுதியின்படி- தொல்பொருள் என்ற பெயரிலான வரைபடம் ஒன்றின் படி- 78 ஏக்கர் காணி வழிபாட்டிடம் ஒன்றிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்த இடத்தை மீள அளவீட்டிற்காக அறிவிக்கும்படி பிரதேசசெயலாளரிடம் தொல்லியல் திணைக்களம் கேட்டது. இதன்படி கொழும்பிலிருந்து வருகைதந்த நில அளவையாளரால் கடந்த வருட இறுதி பகுதியில் இப்பிரதேசம் அளவீடு செய்யப்பட்டு குருந்தாவ விகாரை தொல்லியல் பிரதேசம் என குறிப்பிட்டு 78 ஏக்கர் வரைபடத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 18 ஆம் திகதி இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து தொல்லியல் ஆய்வு பணிகளை குருந்தூர் மலையில் ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில், குருந்தூர் மலையை சுற்றியுள்ள 400 ஏக்கர் காணியை தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 400 ஏக்கரில், சுமார் 150 ஏக்கர் காணி, தண்ணி முறிப்பு கிராமத்திற்குரிய தமிழ் மக்களுடையதாகும் , மிகுதி காணிகள் நாகஞ்சோலை வனப்பகுதியில் உள்ளடங்குகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம் தமது காணிகளை சுத்தம் செய்து விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் நோக்கோடு தண்ணிமுறிப்பு கிராம மக்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் பௌத்த தேரர்கள் தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினரால் அவர்கள் தடுத்து நிறுத்த பட்டு அச்சுறுத்த பட்டிருந்த நிலையில் அவசர அவசரமாக இந்த காணிகளை கோரி பிரதேச செயலகத்துக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.

இந்த நிலையில் மேலதிகமாக 400 ஏக்கர் காணிகளை கோரியுள்ளமை அந்த பகுதி முழுவதும் சிங்கள குடியேற்றங்களை நிறுவி சிங்கள மயப்படுத்த முயற்சிப்பதாக தெரிகிறது.

இந்த காணியை தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒப்படைக்குமாறு வடமாகாண ஆளுநர் திணைக்களத்திலிருந்தும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளிற்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டும் வருகிறது.

எதிர்வரும் முதலாம் திகதி முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த கூட்டத்தில், தொல்பொருள் திணைக்களம் 400 ஏக்கர் காணி கோரும் விடயம் ஆராயப்படவுள்ளது. அதன் நிகழ்ச்சி நிரலில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...