Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

மஹர சிறையில் இறந்த 4 கைதிகளின் உடல்களை எரிக்க உத்தரவு!

T

The Leader Desk

டிசம்பர் 16, 2020 • 5:28 PM

மஹர சிறையில் இறந்த 4 கைதிகளின் உடல்களை எரிக்க உத்தரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்கள் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
  • குறித்த விசேட நிபுணர் குழுவில், சட்ட வைத்திய விசேட நிபுணர்கள் 4 பேர் மற்றும் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தின் ஆயுதங்கள் தொடர்பான விசேட நிபுணர் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.
  • குறித்த நபர்களின் சடலங்களை அடக்கம் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (16) வத்தளை நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
  • இன்றையதினம் (16) குறித்த கைதிகள் 11 பேரில் நால்வரினது பிரேதப் பரிசோதனை அறிக்கை மன்றில் கையளிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்கள் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதற்கமைய, குறித்த நபர்கள் அனைவரும் உடல்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது.

அதன் அடிப்படையில், அவர்களது உடல்களை தகனம் செய்ய அரசாங்கம் முடிவு செய்திருந்த நிலையில், உடல்களை எரித்து அழிப்பதன் மூலம் மஹர சம்பவம் தொடர்பான விசாரணைகளில் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு விடும் எனத் தெரிவித்து, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

எனவே இது தொடர்பில் குறித்த சடலங்களின் பிரேதப் பரிசோதனையை விரைவாக நிறைவு செய்யும் வகையில், ஐவரடங்கிய விசேட நிபுணர் குழுவொன்றை நியமிக்க இணக்கம் காணப்பட்டது.

குறித்த விசேட நிபுணர் குழுவில், சட்ட வைத்திய விசேட நிபுணர்கள் 4 பேர் மற்றும் அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தின் ஆயுதங்கள் தொடர்பான விசேட நிபுணர் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

குறித்த நபர்களின் சடலங்களை அடக்கம் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (16) வத்தளை நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றையதினம் (16) குறித்த கைதிகள் 11 பேரில் நால்வரினது பிரேதப் பரிசோதனை அறிக்கை மன்றில் கையளிக்கப்பட்டது.

இதன்போது, மரணித்த கைதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட சடலங்களை அடக்கம் செய்வதற்காக உறவினர்களிடம் கையளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஆயினும், இதன்போது அரசாங்கம் சார்பில், CID திணைக்கள அதிகாரிகளுடன் சட்ட மாஅதிபரின் இணைப்பதிகாரி, நிஷாரா ஜயரத்ன, அதற்கு எதிர்ப்பை வெளியிட்டார்.

குறித்த சடலங்களால் சுகாதார பிரச்சினை ஏற்படலாம் எனவும், அவற்றை தொடர்ந்தும் உரிய முறையில் பேணிப் பாதுகாப்பதற்கான இடவசதிகள் தற்போது IDH வைத்தியசாலையில் இல்லை எனவும் தெரிவித்ததோடு, அவற்றை அடக்கம் செய்வது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் முறைமையொன்று ஏற்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

எனவே, 2020 ஏப்ரல் 11ஆம் திகதி சுகாதார அமைச்சினால்.. வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானிக்கு அமைய, உரிய வெப்பநிலையில், அவ்வுடல்களை தகனம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

அதற்கமைய, இரு தரப்பு வாதங்களை கருத்திலெடுத்த வத்தளை நீதவான், அவற்றை இன்றும் (16) நாளையும் (17) தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.

இதேவேளை, மஹர சிறையில் இடம்பெற்ற அமைத்தியின்மை தொடர்பில் CIDயினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, நேற்று (15) 35 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதுவரை 344 பேரிடம் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டிய அவர், இவர்களில் சிறை அதிகாரிகள் 104 பேர், சிறைக்கைதிகள் 147 பேர், வைத்தியர்கள் 09 பேர், தாதியர் 17 பேர் உள்ளடங்குவதாக தெரிவித்தார்.

விசேடமாக குறித்த கலகத்தை ஏற்படுத்த முயற்சி செய்த சந்தேகநபர்களை CID யினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, குறித்த 4 பேரும் துப்பாக்கிச்சூடு காரணமாகவே உயிரிழந்துள்ளமை, பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக, மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மஹர சிறையில் இறந்த 4 கைதிகளின் உடல்களை எரிக்க உத்தரவு! | Tamil Leader | We Lead the Nation