Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

பிரதமரின் மே 4 கூட்டத்தை புறக்கணிக்க தீர்மானம்! ஜே.வி.பி ஏற்கனவே அறிவித்துவிட்டது

T

The Leader Desk

மே 1, 2020 • 3:34 PM

பிரதமரின் மே 4 கூட்டத்தை புறக்கணிக்க தீர்மானம்! ஜே.வி.பி ஏற்கனவே அறிவித்துவிட்டது

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 225 முன்னாள் எம்.பி.க்களின் சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது, குறிப்பாக ஜே.வி.பி மற்றும் பலரும் இந்த பேரழிவைச் சமாளிக்க ஒரு பொதுவான வழிமுறையை கோரியுள்ளனர்.
  • மே 4 ம் திகதி நடக்கவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொல்வதில்லை என ஜே.வி.பி யின் தலைவர் அனுர குமார திசாநாயக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
  • மற்றும் சமகி ஜன பலவேகய இன்னும் ஒரு முடிவையும் எடுக்கவில்லை.
எழுத்து அளவு:

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 225 முன்னாள் எம்.பி.க்களின் சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது, குறிப்பாக ஜே.வி.பி மற்றும் பலரும் இந்த பேரழிவைச் சமாளிக்க ஒரு பொதுவான வழிமுறையை கோரியுள்ளனர். மே 4 ம் திகதி நடக்கவிருக்கும் கூட்டத்தில் கலந்து கொல்வதில்லை என ஜே.வி.பி யின் தலைவர் அனுர குமார திசாநாயக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கொரோனா  தொற்றுநோய் நிலைமையை சமாளிக்கவும் தற்போது எழுந்திருக்கும் சட்டப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ளவும் எதிர்க்கட்சிகளிடமிருந்து நிவாரணம் பெறும் நோக்கில் 225 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் திங்கட்கிழமை (மே 04) அலரி  மாளிகையில் கூட்டுவதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார்.

Theleader.lk க்கு கிடைத்த  தகவல்களின்படி, பிரதமரின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டு அலரி மாளிகைக்கு  செல்லும், ஆனால் ஐக்கியதேசியகட்சி. மற்றும் சமகி ஜன பலவேகய இன்னும் ஒரு முடிவையும் எடுக்கவில்லை.

இருப்பினும், கலந்துரையாடலில் பங்கேற்கக் கூடாது என்று இரு கட்சிகளின் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு கட்சி உறுப்பினர்களால் கடுமையாக அழுத்தம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்  தகவல்கள் கூறுகின்றன.

பிரதமரின் அழைப்பை ஏற்று அந்தக் கூட்டத்தில்பங்கேற்குமாறு ஐ.தே.க பலமான இருவர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், எங்களுக்கு கிடைத்த அதிகாரபூர்வமற்ற தகவல்களின்படி, பிரதமரின் பேச்சுவார்த்தைகளை சஜித்தின் கூட்டணி புறக்கணிக்க வாய்ப்புள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...