Tamil Leader News
முக்கியம்
ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●
செய்திகள்

4 மாடி கட்டிடங்களை அமைக்க நேற்று முதல் தடை

T

The Leader Desk

மே 2, 2023 • 9:38 AM

4 மாடி கட்டிடங்களை அமைக்க நேற்று முதல் தடை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • /01-09-1998 மூலம் அறிவிக்கப்பட்டது.
  • இப்பகுதியில் நடக்கும் முறைசாரா வளர்ச்சி, குறைந்த வசதிகள் கொண்ட குடியிருப்புகள், தரமற்ற குடிநீர், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, முறையான வடிகால் அமைப்பு இல்லாததால் நகரின் அழகு படிப்படியாக குறைந்து வருகிறது.
எழுத்து அளவு:

விதிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துடன் கலந்தாலோசித்து புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய மாகாண ஆளுநரின் தலைமையில் சம்பந்தப்பட்ட பங்குதாரர் நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட பணிக்குழுவை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் முன்மொழியப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையானது 38/16/01-06-1978 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நுவரெலியா மாநகர சபைப் பகுதியை நகரப் பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளதுடன், நுவரெலியா பிரதேச சபைப் பகுதியும் நகரப் பிரதேசமாக வர்த்தமானி அறிவித்தல் இல. 154614/01-09-1998 மூலம் அறிவிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்டம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இப்பகுதியில் நடக்கும் முறைசாரா வளர்ச்சி, குறைந்த வசதிகள் கொண்ட குடியிருப்புகள், தரமற்ற குடிநீர், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, முறையான வடிகால் அமைப்பு இல்லாததால் நகரின் அழகு படிப்படியாக குறைந்து வருகிறது.

இப்பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்துவதற்கு இது பெரும் தடையாக உள்ளது.

எனவே, நகரில் பாரிய கட்டிடங்களை நிர்மாணிக்காமல் சுற்றுலாப் பயணிகள் ஓய்வு நேரத்தைக் கழிக்கும் வகையில் இலகுவான சூழலுடன் திட்டங்களைத் தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான சூழலை உருவாக்கும் வகையில் சுற்றுலா அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டத்தை செயல்படுத்தும் போது, அப்பகுதியின் இயற்கை அழகியல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

4 மாடி கட்டிடங்களை அமைக்க நேற்று முதல் தடை | Tamil Leader | We Lead the Nation