Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கொழும்பு உட்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது!

T

The Leader Desk

ஏப்ரல் 25, 2020 • 3:56 PM

கொழும்பு உட்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதேவேளை, ஏனைய சகல மாவட்டங்களிலும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது, ஏப்ரல் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
  • அதன் பின்னர் குறித்த மாவட்டங்களில், மே மாதம் முதலாம் திகதி வௌ்ளிக்கிழமை வரை ஊரடங்கு சட்டம் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கும் தனியார் பிரிவின் தொழிற்சாலைகள், கட்டட நிர்மாண வர்த்தகங்கள், சேவை வழங்கும் நிறுவனங்கள், மரக்கறி, மீன் மற்றும் சில்லறை வியாபாரங்ளை நடத்திச்செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இதேவேளை, ஏனைய சகல மாவட்டங்களிலும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டமானது, ஏப்ரல் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் குறித்த மாவட்டங்களில், மே மாதம் முதலாம் திகதி வௌ்ளிக்கிழமை வரை ஊரடங்கு சட்டம் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் மே நான்காம் திகதி முதல் பணிகளை தொடரும் வகையில் சட்டதிட்டங்கள் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கும் தனியார் பிரிவின் தொழிற்சாலைகள், கட்டட நிர்மாண வர்த்தகங்கள், சேவை வழங்கும் நிறுவனங்கள், மரக்கறி, மீன் மற்றும் சில்லறை வியாபாரங்ளை நடத்திச்செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முற்பகல் 10 மணிக்கு தனியார் நிறுவனங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 4 ஆம் திகதியின் பின்னர் நிறுவனங்களை நடாத்திச்செல்லும் விதம் குறித்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், அடுத்த வாரத்திற்குள் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த நிறுவனங்களின் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மாத்திரமே சேவைக்கு உள்வாங்கப்பட வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...