ஜனாதிபதி, பிரதமரின் உறவினர் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோர் போலி நிறுவனம் மூலம் அதிக சொகுசு வாழ்க்கை வாழ செல்வத்தை குவித்துள்ளதாக உலகின் மிகப்பெரிய ஊடகத் ஆய்வு தெரிவிக்கிறது.
90 நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலக வல்லரசுகள் மற்றும் 300ற்கும் மேற்பட்ட பணக்காரர்கள் ஆகியோரின் நிதி கொடுக்கல் வாங்கல் ள் குறித்து, 117 நாடுகளின் 600ற்கும் மேற்பட்ட
ஊடகவியலாளர்களின் ஆய்வின் ஊடாக இலங்கையின் பெயர் உலகப் புகழ் பெற்றுள்ளது.

பண்டோரா பேப்பர்ஸ் என அழைக்கப்படும் சுமார்,  11 மில்லியனுக்கும் அதிகமான ஆவணக்கோவைகளை வொஷிங்டனை தளமாகக் கொண்ட ஐசிஐஜே என்ற சர்வதேச புலனாய்வு ஊடவியலாளர்களின் கூட்டமைப்பால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆவணங்களுக்கு அமைய, மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ச மற்றும் ஒரு கோடீஸ்வரர் தொழிலதிபர் நடேசன் ஆகியோர் போலியான நிறுவனத்தின் ஊடாக லண்டன் மற்றும் சிட்னியில்  ஆடம்பர குடியிருப்புகளை கொள்வனவு செய்துள்ளனர்.

"நடேசன் சட்டத்தின் கீழ் மறைந்திருக்கும் பிற போலி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை அமைத்துள்ளார். அந்த நிறுவனங்களை இலாபகரமான ஆலோசனை ஒப்பந்தங்களைப் பெறவும் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களிடமிருந்து கலைப் படைப்புகளை கொள்வனவு செய்யவும் அவர் அவற்றைப் பயன்படுத்தியுள்ளார்” என ஐசிஐஜே குறிப்பிட்டுள்ளது.

”2018ஆம் ஆண்டில், பசிபிக் கமாடிடிஸ் நிறுவனத்தின் ஊடாக 31 ஓவியங்கள் மற்றும் பிற தெற்காசிய கலைப் படைப்புகள் ஜெனீவா ப்ரீபோர்ட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, எனினும் அவைகளுக்கு எவ்வித வரியோ அல்லது கட்டணங்களோ செலுத்தப்படவில்லை.”

சிங்கப்பூரை தளமாகக் கொண்ட சேவை வழங்குநரும், நடேசனின் நீண்டகால ஆலோசகருமான ஏசியாசிட்டி டிரஸ்ட் நிறுவனத்திற்கு கிடைத்த இரகசிய மின்னஞ்சல்கள் ஊடாக,  2011ஆம் ஆண்டு நிலவரப்படி, 160 மில்லியன் டொலருக்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை அவர் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  ஏசியாசிட்டி ட்ரஸ்ட் நடேசனின் சில வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகித்துள்ளதோடு அதன் சொத்து மதிப்பு சுமார்  18 மில்லியன் டொலர்களாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
image
எவ்வாறெனினும், நிருபமாவும் நடேசனும் தங்கள் அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துள்ளனர். 
 
image 1

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி