கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வைத்தியர் எலியந்த வைட் (Eliyantha White) உயிரிழந்துள்ளார்.

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியர், எலியந்த வைட் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகராக சேவையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பிரபல மருத்துவர் எலியன்த வைட் கோவிட்டினால் உயிரிழந்தார்

இலங்கையின் பிரபல ஆன்மீக மருத்துவர்களில் ஒருவரான எலியந்த வைட் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக மருத்துவர்களில் முக்கியமான மருத்துவராக எலியந்த வைட் கடயைமாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் தொற்று ஆரம்பமான காலப் பகுதியில் அப்போதைய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியுடன் இணைந்து நதிகளில் புனித நீர் நிறைந்த பானைகளை வீசியிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், கோவிட் தொற்றுக்கு இலக்காகி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த டொக்டர் எலியந்த வைட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி