இலங்கையில் துன்பப்படும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் பலவந்தமாக அடக்கப்படுவதையும், மக்கள் அடக்குமுறை செய்யப்படுவதையும் வன்மையாகக் கண்டிப்பதாக ஈரானின் Hekmatist கம்யூனிஸக் கட்சி அறிக்கையொன்றின் வாயிலாக கூறியுள்ளது.

மக்கள் தமக்குள்ள உரிமைகளின்படி, எதிர்ப்பை வெளிப்படுத்தும் போது அடக்குமுறையை மேற்கொள்வதையும், மக்கள் செயற்பாட்டாளர்களையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் வேட்டையாடுவதை வன்மையாகக் கண்டிப்பதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் காணப்படுகிறது. Hekmatist கம்யூனிஸக் கட்சி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையின் மொழிபெயர்ப்பு:,

இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் அடக்குமுறை செய்யப்படுவதை கண்டிப்போம்!

இலங்கையின் படைத்துறையினால் இலங்கையில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் அடக்குமுறை செய்யப்படுகிறது. இலங்கையில் ​கொவிட் 19 தொற்றின் முன்பாக, உழைக்கும் மக்களின் சம்பளம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளில் பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு எதிராகவும், உயர் கல்வி இராணுமயமாக்கப்படல், போதுமான மானியங்கள் இல்லாமை போன்ற காரணங்களின் மீது எதிர்ப்புகள் தலைதூக்கியுள்ளன. படைத்துறை ஆட்சியின் ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்காக கொவிட் 19 பெருந்தொற்று பயன்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், பல்வேறு தரப்பு மக்களின் ஒத்துழைப்பு விரிவடையும்போது அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தன.

உண்மையான தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாத போதிலும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் பின்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது வீடுகளுக்கு செல்லும் போது அவர்களை வேட்டையாடுவதற்காக காவல்துறை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தாம் எதிர்கொண்டுள்ள இன்னல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், உரிமையை பயன்படுத்தும் மக்களை கைது செய்து துன்புறுத்துவதையும் கண்டிக்க வேண்டும். சந்தேகமின்றி, உலகின் வேறு இடங்களில்; போன்று இலங்கையிலும் முதலாளிளிகளும் அவர்களது அரசும் தமது இலாபத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக தற்போதைய நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்த முயற்சிக்கின்றது.

தற்போது இலங்கையில் நடைபெறும் எதிர்ப்புகள் தனிப்பட்ட சம்பவங்களல்ல என்பதுடன், அது, ‘இப்போது பொறுத்தது போதும்” என்ற உலக அமைப்பின் ஒரு பகுதியாகும். இது உலக ரீதியிலான ஒரே போரட்டமாகும். எதிர்ப்பு தெரிவிக்கும் இலங்கையர்கள் தனியாக இல்லை. சமமான கஷ்ட நிலைமைகளுக்கு சவால் விடுத்திருக்கும் உலகம் பூராவும் பில்லியன் கணக்கான தமது தோழர்களின் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

இலங்கையின் படைத்துறை மற்றும் காவல் துறையின் வற்புறுத்தும் செயற்பாடுகள் அவர்களின் அதிகாரத்தைக் காட்டும் அடையாளங்களல்ல என்பதுடன் அது, உண்மையிலேயே அவர்களது பாலாய்ப்போன ஆட்சிக்கு சவால் விடும் இந்த பாரிய சக்திகளின் எழுச்சியின் மீது அவர்களுக்கிருக்கும் பயத்தின் வெளிப்பாடுதான்.

நாங்கள் இலங்கையின் அனைத்து எதிர்ப்பாளர்களுடனும் தோளோடு தோள் நின்று எதிர்ப்பாளர்கள் மீதான அடக்குமுறை மற்றும் துன்புறுத்தல்களை கண்டிக்கிறோம். கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடும் மற்றும் எதிர்ப்பு காட்டும் உரிமையை ஏற்றுக் கொள்ள இந்த இராணுவ ஆட்சியை வற்புறுத்த வேண்டும்.

எதிர்ப்பாளர்கள் மற்றும் அவர்களின் தலைவர்கள் காவல் துறையினால் கடத்தப்படுவதை நாம் கண்டிக்கிறோம். இலங்கையில் எதிர்ப்பாளர்களுடன் நாங்கள் ஒத்துழைப்புடன் இருந்து துன்புறுத்தல்களை நிறுத்துமாறும், சகல அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

Hekmatist கட்சி – (அதிகாரப்பூர்வ தகவல்) வெளிநாட்டு அமைப்பு

2021 ஒகஸ்ட் 17

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி