கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும் படி அரசாங்கம் கட்டாயப்படுத்துவது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என சிங்கள ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் பலாத்காரமாக கோவிட் தடுப்பூசி ஏற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நேற்றைய தினம் முறைப்பாடொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே அக்மீமன தயாரத்ன தேரர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும்படி அரசாங்கம் கட்டாயப்படுத்துவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

தடுப்பூசி ஏற்றாதவர்கள் அரச நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடையென அரசாங்கம் எவ்வாறு கூற முடியும்.

இந்த தடுப்பூசிகளுக்கு உத்தரவாதம் உள்ளதா? இதனை ஏற்றிக் கொள்வதால் வைரஸ் தொற்று ஏற்படாதெனவும் மரணிக்கமாட்டார்கள் எனவும் உத்தரவாதம் உள்ளதா?

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி