இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இப்போது நாட்டில் கொரோனா தொற்று பரவலானது மக்கள் தொகையாக மாறியுள்ளது.

இவ்வாறு கொரோனா நோயாளிகள் தொடர்ந்து இறக்க நேரிட்டால், ”நாட்டில் தற்போது பாண் தயாரிக்கும் வெதுப்பகங்களில், சடலங்களை தகனம் செய்ய பயன்படுத்த வேண்டியிருக்கும்” என பொது சேவை ஐக்கிய செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் கூறினார்.

கொரோனா தொற்றுநோயை ஒடுக்குவது தொடர்பாக அரசாங்கமும் மற்ற அதிகாரிகளும் தொடர்ந்து செய்து வருகின்ற நிகழ்ச்சிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், நாட்டை சரியான நேரத்தில் மூடாமல் இப்போது நாட்டை மூடுவது பற்றி பேசுவது பயனற்றது என்றும் அவர் கூறினார். எனவே, நாட்டில் தற்போதைய அபிவிருத்தி நடவடிக்கைகள் கூட உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொரோனா தொற்று ஒழிக்கப்படுவதற்கு நாடும், மக்களும் தயாராக இருக்க வேண்டும் என முருத்தெட்டுவே தேரர் வலியுறுத்தினார். தற்போது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நடத்திய போராட்டமானது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய பிரச்சினை அல்ல, ஆனால் கடந்த அரசாங்கம் தான் அதன் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

எனினும், இது எதிர்ப்புக்கான சந்தர்ப்பம். அரசியல் கட்சிகளை வலுப்படுத்தும் பிரச்சாரங்களை நிறுத்துவதும், கொரோனா பாதிக்கப்பட்ட மக்களை குணப்படுத்துவதும் அனைவரின் முதன்மையான பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும் முரத்தெட்டுவே தேரர் மேலும் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி