சிரேஸ்ட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான குசல் பெரேரா வலியுறுத்துகிறார்.சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்ட போது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

கிட்டத்தட்ட ஒரு வருடமும் ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் கொரோனா தொற்றுநோய் பரவுவதை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை, இந்த சமூகம் இப்போது மரணத்திற்கு அஞ்சும் ஒரு கட்டத்தை நோக்கி நகர்கிறது.

ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்த நாட்டைமூடுதல் தோல்வியடைந்துள்ளது. மற்றம் வைரசை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் இன்னும் தீர்வுகளை வழங்கவில்லை.

மருத்துவமனைகளின் வளங்கள் மற்றும் இடம் அதிகரிக்கப்பட்டுள்ளது பெரும்பாலான முக்கிய மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இடம் இல்லை. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது இந்த சமூகம் தனது குடிமக்களின் வாழ்வுரிமைக்காக உடனடியாக கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டும்.

அதற்காக, அனைத்து தொழிற்சங்கங்களும் மக்கள் அமைப்புகளும் உடனடியாக கொரோனாவை கட்டுப்படுத்த சமூக அடிப்படையிலான சுகாதார திட்டத்திற்கு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.

குசலின் முழு அறிக்கை வீடியோவில்

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி