இலங்கை இராணுவத்திற்கு தலைக்கவசங்களை (HELMET)  வழங்குவதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனத்திற்கு அரசாங்க நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

22/04/2020 அன்று திகதியிடப்பட்ட டெண்டரை வழங்க அரசாங்க வர்த்த நிறுவனத்தின் கொள்முதல் குழு (State Trading Corporation)  நிறுவனத்திற்கு 29 ஜூலை 2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஏலம்.அமெரிக்க டொலர்களில்!

நாட்டின் ஒரே ஒரு அனுபவம் வாய்ந்த ஹெல்மெட் உற்பத்தி நிறுவனமான ஹர்ஷ இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட், டெண்டரை பெற்றுக்கொள்வதில் கடுமையான அநீதிக்கு உள்ளாக்கப்பட்டதாக ஜனாதிபதியிடம் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வடக்கில் போரின் போது கூட, இந்த நிறுவனம் அரச படைகளுக்கு கிட்டத்தட்ட 75,000 தலைக்கவசங்களை (HELMET)  வழங்கியுள்ளது.

இந்நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் ஹிமாலி விஜேதுங்க, ஜனாதிபதிக்கு எழுதியயள்ள கடிதத்தில், நிறுவனம் புதிய இயந்திரங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் அதனது தொழில்நுட்பத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Image 2021 08 05 at 10.12.19 AM 1WhatsApp Image 2021 08 05 at 10.12.19 AM 2WhatsApp Image 2021 08 05 at 10.12.19 AM 3

இந்த ஒப்பந்தம் மூலம் நம் நாட்டில் மேலும் பல தொழிற்சாலைகள் வளர வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனது கடிதத்தில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தியில் இருக்கும் மற்றும் சோதனையில் தேர்ச்சி பெற்ற தனது நிறுவனத்தின் தலைக்கவசம் நிராகரிக்கப்பட்டது "வருத்தத்திற்குரியது" என்று அவர் கூறினார்.

ஹிமாலி விஜேதுங்க ஜனாதிபதியிடம் இந்த விவகாரம் குறித்து விசேட விசாரணை நடத்தி, நாட்டின் வெளிநாட்டு செலாவணியை மிச்சப்படுத்தும் மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஒரே ஒரு உள்ளூர் உற்பத்தியாளரான தனது நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

WhatsApp Image 2021 08 05 at 10.12.18 AMWhatsApp Image 2021 08 05 at 10.12.19 AM

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி