Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

32 வருடங்களின் பின் காணியின் ஒரு பகுதி விடுவிப்பு

T

The Leader Desk

ஜூன் 7, 2023 • 7:45 AM

32 வருடங்களின் பின் காணியின் ஒரு பகுதி விடுவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று (06) விடுவிக்கப்பட்டுள்ளது.
  • தனியாருக்கு சொந்தமான 8.6 ஏக்கர் காணியே கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராட்சியினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.
  • ராஜ்பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  • நவரூபரஞ்ஜினி முகுந்தன், 231 வது இராணுவ படைப்பிரிவின் விறிக்கேட் கொமாண்டர் தீலூப பண்டார, கட்டளைத் தளபதி மேஜர் இசுறு சேனாநாயக்க, வாழைச்சேனை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட காணியின் உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
எழுத்து அளவு:
நேற்று (06) விடுவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக படையினர் வசம் இருந்து வந்த தனியார் காணிகள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் விடுவிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த காணியின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான 8.6 ஏக்கர் காணியே கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராட்சியினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து காணி உரிமையாளர்களை இனங்கண்டு உரியவர்களிடம் காணிகளை ஒப்படைக்கும் தொடர் நடவடிக்கைக்காக மாவட்ட அரசாங்க அதிபரினால் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

59 தனிநபர்களுக்கு சொந்தமான காணிகளே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், 231 வது இராணுவ படைப்பிரிவின் விறிக்கேட் கொமாண்டர் தீலூப பண்டார, கட்டளைத் தளபதி மேஜர் இசுறு சேனாநாயக்க, வாழைச்சேனை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட காணியின் உரிமையாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்-

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...