கடந்த 24 மணித்தியாலங்களில் அமைச்சர் விமல் வீரவன்சவின் அமைச்சு தொடர்பில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவரின் கைத்தொழில் அமைச்சின் கீழ் செயற்பட்ட வரையறுக்கப்பட்ட லங்கா பாஸ்பேட் நிறுவனத்தை விவசாய அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நேற்று வௌியிடப்பட்ட விசேட வர்த்தமானியின் மூலம் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, தொழில் அமைச்சின் செயலாளர் அனூஷ பெல்பிட்ட பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு ஜனாதிபதியிடம் அனுமதி கோரியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், துறைமுக அதிகார சபையின் தலைவர், ஓய்வு பெற்ற மேஜர் தயா ரத்நாயக்க கைதொழில் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் பின்னரே அமைச்சர் விமல் வீரவன்சவின் நிர்வாகத்தின் கீழ் இருந்த லங்கா பாஸ்பேட் நிறுவனத்தை விவசாய அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி