Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்: நீதிமன்றத்தில் CID விசேட அறிக்கை தாக்கல்!

T

The Leader Desk

ஜனவரி 31, 2026 • 7:06 PM

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்: நீதிமன்றத்தில் CID விசேட அறிக்கை தாக்கல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் வெளிப்படுத்தப்பட்ட திருகோணமலை கன்சைட் (Gunside) கடற்படை முகாம் பற்றிய விசேட அறிக்கையொன்றை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
  • அத்துடன், அந்த நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகள் குறித்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய நபர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் திரட்டப்பட்ட தகவல்களும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.
  • பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்திலேயே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் வெளிப்படுத்தப்பட்ட திருகோணமலை கன்சைட் (Gunside) கடற்படை முகாம் பற்றிய விசேட அறிக்கையொன்றை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்திலேயே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்படை முகாம் வளாகத்தில் சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் வௌியாகியுள்ள நபர்கள் தொடர்பான பல விடயங்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அந்த நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகள் குறித்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய நபர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் திரட்டப்பட்ட தகவல்களும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்ட நபர் ஒருவர் தொடர்பாக பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின் போதே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது காணாமல் ஆக்கப்பட்டுள்ள இந்த நபரும், கன்சைட் முகாம் வளாகத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...