சிறுமி ஒருவரை பலமுறை பாரதூரமான பாலியல் குற்றத்திற்கும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பிக்குவின் பெயரை ஊடகங்கள் வெளியிடாதது ஏன் என 'கொழும்பு டெலிகிராப்' (Colombo Telegraph) ஆசிரியர் சிரேஷ்ட ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
"இந்தச் செய்தி எல்லா இடங்களிலும் பரவி வருகிறது. 'லீடர்' (Leader) இணையதளத்திலும் இது வெளியாகியிருந்தது. ஏன் இந்த மகாநாயக்கரின் (பிக்குவின்) பெயரை எவரும் கூற மறுக்கிறார்கள்? இதுவரை அவரிடம் விசாரணைகள் கூட நடத்தப்படவில்லை. அரசாங்கம் அவருக்கு பயப்படுகிறதா? அல்லது பொலிஸார் அவருக்கு பயப்படுகிறார்களா?" என உவிந்து குருகுலசூரிய வினவியுள்ளார்.


