அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) முன்னிலையில் ஆஜராகவிருந்ததாக 'அத தெரண' செய்தி வெளியிட்டுள்ளது.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களால் (Hackers) திருடப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, நிதியமைச்சின் செயலாளர் மற்றும் அதன் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
'ஹர்ஷண சூரியப்பெரும ஒருநாள்கூட நிதிக் குழுவிற்கு வரவில்லை' -
நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும இதுவரையில் ஒருமுறை கூட அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) முன்னிலையில் ஆஜராகவில்லை என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
மகா திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மோசடி தொடர்பாக விளக்கமளிக்க இன்று (30) வருமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, தம்மால் இன்று கலந்துகொள்ள முடியாது என நிதியமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தது குறித்து கருத்து வெளியிடும் போதே ஹர்ஷ டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
"ஜனாதிபதி இது தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதால், வேறொரு தினத்தை வழங்குமாறு நிதியமைச்சின் செயலாளர் என்னிடம் கோரியுள்ளார். நாட்டின் நிதி விவகாரங்கள் குழுக்கள் மூலமே கையாளப்படுகின்றன. கடன் கொடுப்பனவுகள் தொடர்பான நேரடி மேற்பார்வை அதிகாரம் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கே உள்ளது. இந்த அறிவித்தல் மூலம் நாம் ஏற்றுக்கொள்ளும் ஜனநாயகத்திற்கு பாரிய அடியொன்று கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் இந்தக் குழுவிற்கு வர மறுக்கிறார்கள்? எதனை மறைக்க முயற்சி செய்கிறார்கள்? முறையை மாற்றுவதாக (System Change) கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இருந்த முறையையும் சீரழித்துக்கொண்டிருக்கிறது. ஹர்ஷண சூரியப்பெரும இதுவரை ஒருநாள்கூட நிதிக் குழுவிற்கு வரவில்லை. இவர் பாராளுமன்றத்தை விட மேலானவரா? குழு கூடி யாரிடம் பேசுவது?"
நிதியமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை அவரால் நிறைவேற்ற முடியாவிட்டால், அதனைச் செய்யக்கூடிய ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஹர்ஷ டி சில்வா தனது 'X' பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சின் செயலாளர் பதவியை வகிக்கும் முதலாவது அரசியல்வாதி ஹர்ஷண சூரியப்பெரும என்றும், அவரது இந்தத் தீர்மானம் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீறும் செயல் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


