ஒவ்வொரு கைதுக்கும் தலா 10,000 ரூபா பணப்பரிசு வழங்க பொலிஸ் மா அதிபர் தீர்மானித்துள்ளார்.
இந்தத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர 'தினமின' (Dinamina) பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
ஹெரோயின், ஐஸ் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களைப் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 900-க்கும் மேற்பட்ட சாரதிகள், இந்த ஆண்டின் கடந்த 29 நாட்களில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த 7 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 6,000க்கும் அதிகமான மதுபோதை சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வெளிப்படுத்தியுள்ளார்.
மது மற்றும் போதைப்பொருள் பாவனையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்காக நாடு முழுவதும் விசேட சுற்றிவளைப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


