நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இன்று (30) முற்பகல் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் வைத்து கையெழுத்தானது.
இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, சம்பள நிர்ணய சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி, தற்போது 1,350 ரூபாவாக உள்ள தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 400 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த அதிகரிப்பில் 200 ரூபாவை தோட்ட நிறுவனங்களும், எஞ்சிய 200 ரூபாவை அரசாங்கமும் வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக உயர்வடையும்.
இந்தச் சம்பள உயர்வு 2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும். ஜனவரி மாதத்திற்கான தொழிலாளர்களின் வருகை விபரங்கள் பிப்ரவரி 3 ஆம் திகதி கிடைத்தவுடன், அரசாங்கம் வழங்க வேண்டிய பங்களிப்புத் தொகையை தோட்ட நிறுவனங்களுக்கு விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களின் வங்கி கணக்கு விபரங்களை வழங்கியுள்ளன. அதன்படி, 200 ரூபா கொடுப்பனவை வங்கி கணக்குகளில் வைப்பிலிடுவதற்கான பணிகளும் தயாராக உள்ளன.



