Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

IMF பணிப்பாளர் நாயகம் பெப்ரவரியில் இலங்கைக்கு வருகிறார்!

T

The Leader Desk

ஜனவரி 30, 2026 • 5:07 AM

IMF பணிப்பாளர் நாயகம் பெப்ரவரியில் இலங்கைக்கு வருகிறார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தரவுள்ளதாக அந்த நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 'டித்வா' (Ditwa) சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் (28) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
  • கடந்த 22ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த இந்தத் தூதுக்குழுவினர், நாடு முழுவதும் பயணம் செய்து சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தனர்.
எழுத்து அளவு:

தரவுள்ளதாக அந்த நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடன் வசதிகளின் வெற்றியை மீளாய்வு செய்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கைக்கு உறுதிப்படுத்துவதே இவரது விஜயத்தின் முதன்மை நோக்கமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அவர் வருகை தரும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'டித்வா' (Ditwa) சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் (28) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த 22ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த இந்தத் தூதுக்குழுவினர், நாடு முழுவதும் பயணம் செய்து சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை நேரில் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தனர்.

கடுமையான பேரிடர் சூழ்நிலையிலும் இலங்கை தற்போது சரியான பொருளாதார திசையில் பயணிப்பதாகச் சுட்டிக்காட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதித் (EFF) திட்டத்தின் 6-வது தவணையை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மார்ச் மாதத்திற்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் உடன்படிக்கையில் எவ்வித மாற்றங்களும் இன்றி, அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல இரு தரப்பினரும் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...