Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அரசாங்கத்துக்கு GMOA வழங்கிய 48 மணிநேர காலக்கெடு இன்றுடன் நிறைவு!

T

The Leader Desk

ஜனவரி 30, 2026 • 4:42 AM

அரசாங்கத்துக்கு GMOA வழங்கிய 48 மணிநேர காலக்கெடு இன்றுடன் நிறைவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
  • ஆனால், அரசாங்கம் வளைந்து கொடுத்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தயாராக இல்லை.
  • இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண்பதற்காக மத்திய செயற்குழு கடந்த நேற்று முன்தினம் சுகாதார அமைச்சருக்கு 48 மணித்தியால கால அவகாசத்தை வழங்கியது.
எழுத்து அளவு:

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் அரசாங்கம் எவ்வித சாதகமான பதிலையும் வழங்காத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று நிறைவேற்று சபை கூடி தீர்மானம் எடுக்கும் என அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர் சமில் விஜேசிங்க:

"அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் நாம் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். நாம் நீதியையே கோருகிறோம். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்வுகளை எட்டும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

ஆனால், அரசாங்கம் வளைந்து கொடுத்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தயாராக இல்லை. இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண்பதற்காக மத்திய செயற்குழு கடந்த நேற்று முன்தினம் சுகாதார அமைச்சருக்கு 48 மணித்தியால கால அவகாசத்தை வழங்கியது. அந்த அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

இதற்குத் தீர்வு கிடைக்காவிட்டால், அடுத்தகட்ட தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை மத்திய செயற்குழு நிறைவேற்று குழுவிடம் வழங்கியுள்ளது. அதன்படி, இனிவரும் நடவடிக்கைகள் எவ்வாறு அமையும் என்பதை நாட்டுக்கு அறிவிக்க எதிர்பார்க்கிறோம்."

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...