Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

அருவக்காலுக்கு நாள் ஒன்றுக்கு 300 மெட்ரிக் தொன் குப்பை

T

The Leader Desk

ஏப்ரல் 3, 2023 • 9:54 AM

அருவக்காலுக்கு நாள் ஒன்றுக்கு 300 மெட்ரிக் தொன் குப்பை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிலைபேறான முறையில் நடத்துவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  • அந்த அறிக்கையின்படி, ஆரம்பத் திட்டத்தின்படி திட்டத்தைப் பராமரிப்பதற்கு வருடாந்தம் சுமார் 2.125 பில்லியன் ரூபா செலவாகும்.
  • அத்துடன், இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 300 மெற்றிக் தொன் குப்பைகள் பொருளாதார ரீதியில் பயன்பெற முடியும் என சம்பந்தப்பட்ட குழு அறிக்கை காட்டியுள்ளது.
  • பொதுவாக, கொழும்பு நகரில் மாத்திரம் தினமும் 600 மெற்றிக் தொன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
எழுத்து அளவு:

நிலைபேறான முறையில் நடத்துவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தை மேலும் அமுல்படுத்துவதற்கு பொருத்தமான அமைப்பை தயார் செய்யுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் நகர மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார். அதற்கமைவாக அமைச்சின் செயலாளரினால் தகுந்த முறைமையை தயாரிப்பதற்காக நிபுணர் தொழில்நுட்ப குழுவொன்று நியமிக்கப்பட்டது.

கொழும்பு மாநகரம் தொடர்பான திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டம் தொடர்பில் நீண்ட தொழில்நுட்ப பகுப்பாய்வுகளை மேற்கொண்டு நிபுணர் தொழில்நுட்பக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, ஆரம்பத் திட்டத்தின்படி திட்டத்தைப் பராமரிப்பதற்கு வருடாந்தம் சுமார் 2.125 பில்லியன் ரூபா செலவாகும். அத்துடன், இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 300 மெற்றிக் தொன் குப்பைகள் பொருளாதார ரீதியில் பயன்பெற முடியும் என சம்பந்தப்பட்ட குழு அறிக்கை காட்டியுள்ளது.

பொதுவாக, கொழும்பு நகரில் மாத்திரம் தினமும் 600 மெற்றிக் தொன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. களனி பகுதியில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து புகையிரதத்தில் அருவக்காலு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு சுகாதார அமைப்பில் சேமிக்கப்படும்.

அருவாக்கலு பகுதியில் 265 ஏக்கர் பரப்பளவில் இந்த சுகாதாரமான குப்பை கொட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் பல ஏக்கர் பூங்காவாகவும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் அழகுபடுத்தப்பட்டிருப்பதும் சிறப்புக்குரியது.

அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தாமல் நிதி ரீதியாக இலாபகரமான மற்றும் நிலையான முறையில் நடத்துவதற்கு தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வணிக மாதிரியின் கீழ் இத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஓரளவு இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குப்பைகளை அருவக்காலு அறிவியல் பூர்வமான சுகாதாரக் கிடங்கில் வைப்பதன் மூலம் சக்திக்குத் தேவையான இயற்கை எரிவாயுவையும் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரையும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நாட்டில் நிலவும் குப்பை நெருக்கடிக்கு முறையான விஞ்ஞான ரீதியிலான சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வை வழங்குவதற்காக உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சுகாதாரக் கழிவுகளை சேமித்து வைப்பது வழமை என்றும், நாட்டின் குப்பை பிரச்சினைகளுக்கு வெற்றிகரமான தீர்வை வழங்கும் திட்டம் இது என்றும் அமைச்சர் கூறினார்.

இந்நாட்டில் நிலவும் குப்பை பிரச்சினைக்கு விஞ்ஞான ரீதியாகவும், சுற்றாடல் ரீதியாகவும் இணக்கமான நீண்டகால தீர்வொன்றின் தேவை நீண்டகாலமாக இருந்து வந்துள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரச பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய போதே இது தொடர்பில் முதன் முதலாக கவனம் செலுத்தப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அருவக்காலுக்கு நாள் ஒன்றுக்கு 300 மெட்ரிக் தொன் குப்பை | Tamil Leader | We Lead the Nation