Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஏப்ரல் 30 முதல் அரச செலவினங்களை தெளிவு படுத்த முடியுமா ! மங்கள ஜனாதிபதிக்கு சவால்

T

The Leader Desk

மே 5, 2020 • 5:31 PM

ஏப்ரல் 30 முதல் அரச செலவினங்களை தெளிவு படுத்த முடியுமா ! மங்கள ஜனாதிபதிக்கு சவால்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர் சவாலை கடிதம் மூலமாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தரவுக்கு இன்று (மே 05) வழங்கியுள்ளார்.
  • முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பாக 2020 ஏப்ரல் 28, அன்று ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.அந்த கடிதத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர ஏப்ரல் 30 அன்று ஊடகங்களுக்கு ஒரு பதில் கடிதத்தை வெளியிட்டார்.
  • பிரிவு 150 (3) இன் படி ஜனாதிபதி ஒரு வெற்று காசோலையைப் பெறவில்லை என்று நான் மீண்டும் சொல்கிறேன்.
எழுத்து அளவு:

அவர் சவாலை கடிதம் மூலமாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தரவுக்கு இன்று (மே 05) வழங்கியுள்ளார்.

நாட்டின் ஆபத்தான சூழ்நிலையைப் பொறுத்தவரை பொது சேவைக்கான ஊதியம் உள்ளிட்ட அத்தியவசிய செலவுகளுக்கு ஒப்புதல் அளிக்க 2020 ஏப்ரல் 30 முதல் தேர்தல் நடாத்தி பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் வரை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அனைத்து கட்சிகளின் உதவியுடன் கலைக்கப் பட்ட பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பாக 2020 ஏப்ரல் 28, அன்று ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.அந்த கடிதத்திற்கு  ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர ஏப்ரல் 30 அன்று ஊடகங்களுக்கு ஒரு பதில் கடிதத்தை வெளியிட்டார்.

அன்று பிற்பகல் டுவிட்டரில் ஒரு செய்தியை முன்னாள் நிதியமைச்சர், ஜனாதிபதியின் செயலாளரின் பதிலை முக்கியமான அரசியலமைப்பு சிக்கல்களைத் தவிர்த்து  தேங்காய் பையுடன் எங்கே போகிறீர்கள்  எனும் கதை போல் உள்ளது என்று குறிப்பிடிருந்தார்.

பிரிவு 150 (3) இன் படி ஜனாதிபதி ஒரு வெற்று காசோலையைப் பெறவில்லை என்று நான் மீண்டும் சொல்கிறேன்.

 பழைய பாராளுமன்றம் கலைக்கப்ப்பட்ட நாளிலிருந்து" மூன்று மாத காலத்திற்கு மட்டுமே அவர் பணத்தை ஒதுக்க முடியும். புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் திகதி எப்போது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கேட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஏப்ரல் 30 முதல் அரச செலவினங்களை தெளிவு படுத்த முடியுமா ! மங்கள ஜனாதிபதிக்கு சவால் | Tamil Leader | We Lead the Nation