Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

ரயில் விபத்து குறித்து 3 மாதங்களுக்கு முன் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

T

The Leader Desk

ஜூன் 4, 2023 • 9:35 AM

ரயில் விபத்து குறித்து 3 மாதங்களுக்கு முன் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன் பின்னணியில், தொழில்நுட்ப குறைபாடு உள்ளதாக அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகின.
  • இந்நிலையில், ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பே அதிகாரிகள் தரப்பில் மத்திய அமைச்சகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
  • முன்னதாக பிப்ரவரி 8ம் திகதி கர்நாடகாவில் ஹோசதுர்கா ரோடு ரயில் நிலையத்தில், சிக்னல் கோளாறு காரணமாக இரு ரயில்கள் மோதும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
  • பின் அது நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது.
எழுத்து அளவு:


இதன் பின்னணியில், தொழில்நுட்ப குறைபாடு உள்ளதாக அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பே அதிகாரிகள் தரப்பில் மத்திய அமைச்சகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து தவிர்ப்பை சுட்டிக்காட்டி இந்திய ரயில்வேக்கு தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் கடந்த பிப்ரவரி மாதமே கடிதம் எழுதியிருக்கிறார்.

முன்னதாக பிப்ரவரி 8ம் திகதி கர்நாடகாவில் ஹோசதுர்கா ரோடு ரயில் நிலையத்தில், சிக்னல் கோளாறு காரணமாக இரு ரயில்கள் மோதும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பின் அது நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து தவிர்ப்பை சுட்டிக்காட்டி, சிக்னலில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் ஹரி சங்கர் என்பவர் கடிதம் எழுதியிருந்தார்.

அது தற்போது வெளிவந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் அப்போதே உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...