பயன்படுத்தப்பட்டு வரும் தோட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மிகவும் பயனுள்ள முறையில் அபிவிருத்தி செய்வதற்காக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து விருப்பப் பிரகடனங்களைக் (EOI) கோரும் இரண்டாம் கட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட (Budget) கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாகவே இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதற்கமைய, அமைச்சின் கீழ் இயங்கும் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை (JEDB), இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SLSPC) மற்றும் அல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் ஆகியவற்றுக்குச் சொந்தமான, பயன்படுத்தப்படாத அல்லது குறைந்தளவில் பயன்படுத்தப்படும் நிலங்கள், தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் பங்களாக்கள் ஆகியன இதன் மூலம் உகந்த முறையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு முன்னுரிமை; 5 பிரதான பிரிவுகள்!
கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, மொனராகலை, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள இந்த மதிப்புமிக்க அரச சொத்துக்களை, விவசாயம் மற்றும் சுற்றுலா சார்ந்த நோக்கங்களுக்காக (Agricultural and Tourism Purposes) முதலீடு செய்வதற்குத் தகுதியுடைய முதலீட்டாளர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இதன்போது, முதலீட்டுக்கான நிலப்பரப்புகள் 5 பிரதான பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இலங்கைப் பிரஜைகளான தனிநபர்கள் மட்டுமன்றி, நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள எந்தவொரு சட்டபூர்வமான நிறுவனமும் அல்லது அமைப்பும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த முதலீட்டு வாய்ப்புகளுக்காக விருப்பப் பிரகடனங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 ஜூன் மாதம் 30 ஆம் திகதி முற்பகல் 11.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி மற்றும் விபரங்கள்:
ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் தங்களது விண்ணப்பங்களைப் பதிவுத் தபாலிலோ அல்லது நேரிடையாகவோ பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்:
தலைவர், உயர் கொள்முதல் குழு (High Procurement Committee), பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, 8 ஆம் மாடி, 'A' முனையம், செத்சிரிபாய II ஆம் கட்டம், பத்தரமுல்ல.
இது குறித்த மேலதிக விபரங்களை 0112186223 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது mpeiunderutilizedland@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


