இதன்படி, இன்று (29) அதிகாலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டாலர்களாகப் பதிவாகியுள்ளது. நேற்று (28) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,164 அமெரிக்க டாலர்களாகக் காணப்பட்டது.
அமெரிக்க டாலரின் மதிப்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களும் மத்திய வங்கிகளும் தங்கத்தில் முதலீடு செய்வதிலும், தங்க இருப்புக்களைச் சேகரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயருவதற்குக் காரணம் என வெளிநாட்டுப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


