விவசாய காப்புறுதி சபையினால் விவசாயிகளுக்காக "காப்புறுதி மாதம்" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயா பீன்ஸ், மிளகாய் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களுக்கும் வறட்சி, வெள்ளம், காட்டு யானைகள், பூச்சித் தாக்கம், தீ விபத்து மற்றும் நோய்களினால் ஏற்படும் சேதங்களுக்குக் காப்புறுதி நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.
குறைந்த அளவிலான தவணைப் பணத்தைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளப்படும் இந்தக் காப்புறுதித் திட்டத்தின் மூலம், இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பயிர்ச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
தவணைப் பண விபரங்கள்:
தானியப் பயிர்கள்: பயறு, உளுந்து, குரக்கன், நிலக்கடலை, எள்ளு மற்றும் கொள்ளு போன்ற பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 60,000/- இழப்பீட்டைப் பெறுவதற்கு, காப்புறுதித் தொகையில் 7% தவணைப் பணமாகச் செலுத்த வேண்டும்.
காய்கறி மற்றும் ஏனைய பயிர்கள்: மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீட்ரூட், கோவா, கரட், லீக்ஸ், சிவப்பு வெங்காயம், கத்தரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், மாலு மிளகாய், தக்காளி, பாகற்காய் மற்றும் பூசணி போன்ற பயிர்களுக்கும் ஒரு ஏக்கருக்கான காப்புறுதித் தொகையில் 7% செலுத்தினால் போதுமானது.
உதாரணமாக: சர்க்கரை வள்ளிக்கிழங்கு பயிர்ச்செய்கையில் ஒரு ஏக்கருக்கு ரூ. 100,000/- காப்புறுதியைப் பெறுவதற்குச் செலுத்த வேண்டிய தவணைப் பணம் ரூ. 7,000/- ஆகும்.
ஏனைய பயிர்கள்:
இஞ்சி, மஞ்சள், கருவா, மிளகு, அன்னாசி, பப்பாளி மற்றும் வாழை போன்ற பயிர்ச்செய்கைகளுக்கும் மிகவும் சலுகை அடிப்படையிலான தவணைக் கட்டணத்தில் காப்புறுதித் திட்டங்களை விவசாய காப்புறுதி சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டங்களில் இணைந்து பயிர்ச் சேத அபாயங்களிலிருந்து பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளுமாறு விவசாயிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களை விவசாய காப்புறுதி சபையின் தலைமை அலுவலகம் அல்லது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.


