டொலர் ஊழல் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் நேற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.
டெண்டர் விபரங்கள்:
இந்த ஆண்டு மார்ச் மாதம் 'Trafigura Pte Ltd' நிறுவனத்திற்கு ஒரு பேரலுக்கு 45 டொலர் பிரீமியம் அடிப்படையில் 248,000 பேரல்களை வழங்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மற்றொரு நிறுவனம் 38 டொலர் பிரீமியத்தில் வழங்க முன்வந்திருந்தும், அதனை நிராகரித்து அதிக விலையுடைய நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளர்கள்:
முன்னாள் அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், பாடலி சம்பிக்க ரணவக்க, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, சுகீஸ்வர பண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள உள்ளிட்டோர் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.
விசாரணை கோரப்பட்டுள்ள விடயங்கள்:
குறித்த நிறுவனம் போதிய டீசல் கையிருப்பைப் பராமரிக்கத் தவறியுள்ளதா, எரிசக்தி அமைச்சர் மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவரின் கவனக்குறைவு இதில் உள்ளதா, மற்றும் இந்த கொடுக்கல் வாங்கலில் ஊழல் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன் 'Trafigura' நிறுவனம் முன்னதாக ஒப்பந்தத்தை மீறியிருந்தும் அதற்கு மீண்டும் டெண்டர் வழங்கப்பட்டமை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


