(Hackers) திருடப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் வீட்டிற்கு முன்பாக இன்று (28) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நவ ஜனதா பெரமுனவின் (Nava Janatha Peramuna) தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட அக்கட்சியின் ஆதரவாளர்கள் குழுவொன்றே பெலவத்தை, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள செயலாளரின் வீட்டிற்கு முன்பாக இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாணத் தாக்குதல்:
போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் மீது இனந்தெரியாத தரப்பினரால் சாணத் தாக்குதல் (Cow dung attack) மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவம் 'அத தெரண' கெமராக்களில் பதிவாகியுள்ளது.
பதற்ற நிலை:
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான சூழல் உருவானது. இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொலிஸார் ஸ்தலத்திற்கு அழைக்கப்பட்டனர்.


