மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மாணவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் விபரங்கள்:
இன்று காலை 7.30 மணியளவில் ராணிகாடு - பகவந்தலாவ பிரதான வீதியின் கேம்பியன் தோட்டப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலை விபரங்கள்:
விபத்தில் காயமடைந்த 34 மாணவர்கள் பகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அதன் பிரதேச வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே. ஜயசூரிய தெரிவித்தார்.
அவர்களில் படுகாயமடைந்த 10 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த விதம்:
பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ்ஸின் பிரேக் தொகுதியில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக, பஸ்ஸைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சாரதி அதனை வீதியோரத்தில் இருந்த மண்மேட்டில் மோதி நிறுத்தியுள்ளார்.


