கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை ஜெயிலர் ஒருவரும் பெண் வார்டர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்:
போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு 14, நவக்கம்புர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஆவார்.
காயமடைந்தவர்கள்:
நேற்று (27) காலை இடம்பெற்ற இந்த மோதலில் மேலும் ஒரு கைதியும் சிறை உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகள்:
சிறைச்சாலை திணைக்களத்தினால் இது குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உதவிச் சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், கொழும்பு திசைக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையில் மேலதிக பொலிஸ் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


