இடம்பெறாவிடின், அடுத்த 48 மணிநேரத்திற்குப் பிறகு போராட்டத்தைத் தீவிரப்படுத்தவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று (28) கூடியதுடன், இதன்போது மேலதிக தீர்மானங்களை எடுப்பதற்கான முழு அதிகாரமும் நிறைவேற்று சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:
தொடர் போராட்டம்: தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
மருந்துச் சீட்டு புறக்கணிப்பு: வைத்தியசாலைகளில் கையிருப்பில் இல்லாத மருந்துகளை வெளியிலிருந்து கொள்வனவு செய்வதற்காக, மருந்துச் சீட்டுகளை (Prescriptions) எழுதும் நடைமுறை தொடர்ந்து நிறுத்தப்படும்.
சுகாதார முகாம்கள் புறக்கணிப்பு: அரசியல் குழுக்களினால் முன்னெடுக்கப்படும் சுகாதார மருத்துவ முகாம்களில் பங்கேற்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய வார்டுகள் புறக்கணிப்பு: போதியளவு வைத்தியர்கள் இல்லாத வைத்தியசாலைகளில், புதிய வார்டுகள் மற்றும் அலகுகளை நிர்மாணிக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


