Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

'ட்ரயல் அட் பார்' முறையில் ரணிலின் வழக்கை விசாரிக்கத் தீர்மானம்!

T

The Leader Desk

ஜனவரி 28, 2026 • 9:45 PM

'ட்ரயல் அட் பார்' முறையில் ரணிலின் வழக்கை விசாரிக்கத் தீர்மானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முறையான குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளது.
  • இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
  • இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
  • முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
எழுத்து அளவு:

முறையான குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளது.

வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் மார்ச் மாதம் மேல்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் தரப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்தச் சமர்ப்பணத்தை வழங்கினார்.

முதல் சந்தேகநபரான ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன எனவும், இரண்டாவது சந்தேகநபரான சமன் ஏகநாயக்க என்றும் அழைக்கப்படும் சோமிசார பண்டார ஏகநாயக்க மீதான விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.

மீதமுள்ள விசாரணைகள் முடிவடைந்ததும், திட்டமிட்டபடி மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

பிணையில் விடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமானார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்துக்கு அதிகாரபூர்வமற்ற விஜயம் மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன எனப் புலனாய்வாளர்கள் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தனர்.

இந்தக் கருத்தை நீதிமன்றம் கவனத்தில் கொள்வதாக கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தது. இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேல் நீதிமன்றம் ஒரு நீதிபதி ஆயத்தைக் கொண்டதாக அமர்வது வழக்கம். ஆயினும் விசேட வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக மூன்று நீதிபதிகளைக் கொண்ட 'ட்ரயல் அட் பார்' மேற்கொள்ளப்படுவது உண்டு.

கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடூர கொலை வழக்கு, மிருசுவில் படுகொலை வழக்கு, உடத்தல்வின்ன படுகொலை வழக்கு போன்றவை 'ட்ரயல் அட் பார்' மன்றில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். விசாரணைகளின் பின்னர் நீதவான் இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் முன்னிலையாவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...