Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

மண்சரிவில் புதையுண்ட இளைஞனின் சடலம் இரண்டு மாதங்களின் பின் மீட்பு!

T

The Leader Desk

ஜனவரி 28, 2026 • 5:10 AM

மண்சரிவில் புதையுண்ட இளைஞனின் சடலம் இரண்டு மாதங்களின் பின் மீட்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கெப்பட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • அசித கோசல எனும் 30 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
  • கடந்த நவம்பர் 27ஆம் திகதி, டிட்வா சூறாவளியுடன் பெய்த கடும் மழையினால் கவரம்மான பகுதியில் ஏற்பட்ட மண்ணரிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, லொறி சாரதியான இவர் மீண்டும் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதையுண்டார்.
  • அக்காலப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, வாகனப் போக்குவரத்திற்கு மாத்திரம் வழிவிடும் வகையில் மணல் அகற்றப்பட்டது.
எழுத்து அளவு:

பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கெப்பட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெப்பட்டிபொல, கவரம்மான பகுதியில் சரிந்து வீழ்ந்திருந்த மண் மேடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களால் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மிரஹவத்த, வெரல்லவத்த பகுதியைச் சேர்ந்த ஆர்.எம். அசித கோசல எனும் 30 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 27ஆம் திகதி, டிட்வா சூறாவளியுடன் பெய்த கடும் மழையினால் கவரம்மான பகுதியில் ஏற்பட்ட மண்ணரிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, லொறி சாரதியான இவர் மீண்டும் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதையுண்டார்.

அக்காலப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, வாகனப் போக்குவரத்திற்கு மாத்திரம் வழிவிடும் வகையில் மணல் அகற்றப்பட்டது. இதன் காரணமாக காணாமல் போனவரின் சடலத்தை அன்று கண்டுபிடிக்க முடியாமல் போனது.

தற்போது வானிலை சீராகியுள்ள நிலையில், வெலிமடை - நுவரெலியா வீதியில் கெப்பட்டிபொல முதல் பெலுங்கல வரையான பகுதிகளில் சரிந்துள்ள மண் மேடுகளை அகற்றும் பணியை வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்து வருகின்றது.

இதன்போது கவரம்மான பகுதியில் மண் அகற்றும் போதே குறித்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கெப்பட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மண்சரிவில் புதையுண்ட இளைஞனின் சடலம் இரண்டு மாதங்களின் பின் மீட்பு! | Tamil Leader | We Lead the Nation