Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

28 வயது கரலின் ஜுரி கீரிடத்தைக் கைவிட்டார் : பரபரப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்!

T

The Leader Desk

ஏப்ரல் 9, 2021 • 1:16 PM

28 வயது கரலின் ஜுரி கீரிடத்தைக் கைவிட்டார் : பரபரப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தானாக தனக்கு யார் மீதும் தனக்கு தனிப்பட்ட கோபம் இருக்கவில்லை எனவும் எந்த நிகழ்ச்சி நிரலையும் கொண்டிருக்கவில்லை எனவும் தமக்கு திருமதி இலங்கை அழகுராணிப் போட்டியில் பங்கெடுத்த அனைவரும் விசேடமானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
  • அழகு ராணி இறுதிப் போட்டியில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டுகிறேன்.
  • நான் எப்போதும் சரி என்று தெரியும் பக்கத்தில் நிற்கிறேன்.'' 2020 திருமதி உலக அழகி கீரிடத்திற்காக போட்டியிடுவதற்கான தளத்தை ஏற்படுத்திய போட்டி ஏற்பாட்டாளர்கள் இந்த சம்பவத்தினால் எதிர்கொண்ட அசௌகரியங்களை நானும் எதிர்கொண்டுள்ளேன்.
எழுத்து அளவு:

தானாக தனக்கு யார் மீதும் தனக்கு தனிப்பட்ட கோபம் இருக்கவில்லை எனவும் எந்த நிகழ்ச்சி நிரலையும் கொண்டிருக்கவில்லை எனவும் தமக்கு திருமதி இலங்கை அழகுராணிப் போட்டியில் பங்கெடுத்த அனைவரும் விசேடமானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் நியாயமான வாய்ப்புக்கள் இருக்க வேண்டும் எனவும் விதிமுறைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் தான் ஆரம்பமுதலே கூறியதாகவும்

ஆனாலும் தனது கோரிக்கைகள் செவி மடுக்கப்படாததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 4ம் திகதி நடைபெற்ற

திருமதி இலங்கை அழகுராணிப்போட்டிக்கு முதல்நாள் நடுவர் குழாமில் இருந்து வெளியேறியதாகவும் கரலின் ஜுரி தெரிவித்துள்ளார்.

தாம் எப்போதும் விழுமியங்களுக்கு அமைய நடப்பவர் எனவும் தனது நியாயமான கோரிக்கைகள் செவிமடுக்கப்படாமையால் தனது உலக திருமதி அழகு ராணி பட்டத்தை திரும்பக் கையளிப்பதாகவும் கூறியுள்ளார்.

அனைத்திற்கும் மேலாக ஒரு பெண்ணிற்கு நியாயமான வாய்ப்புக் கிடைப்பதே முக்கியமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்ததை அடுத்து இதுகுறித்து தாம் பெரிதும் கவலை கொள்வதாகவும், தனக்கு யாருடனும், தனிப்பட்ட விரோதமோ, தனிட்ட ரீதியான கோபதாபங்களோ இல்லை என்றும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவின் தமிழ் மொழியாக்கம் சுருக்கமாக..

ஆயுபோவன்
வணக்கம்
உலக வாழ் அனைவருக்கும்,

113571437 348838126515955 869992378500187461 nஎனது அழகான நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் அனைத்து இலங்கையருக்கும்,

கீரிடம் வென்ற மற்றும் கீரிடத்திற்காக போட்டியிட்ட அனைத்து அழகு ராணிகளுக்கும்,

இறுதிப் போட்டியில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து உண்மையில் மனம் வருந்துகிறேன்.

எனக்கு யாருடனும் தனிப்பட்ட கோபதாபங்கள் கிடையாது.

அழகு ராணி இறுதிப் போட்டியில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டுகிறேன்.

''போட்டியாளர்கள் தமது திறமையை வெளிப்படுத்தி, அதற்கேற்ற வெற்றியைப் பெறுவதற்கான சமமான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இதற்காக நானும் உழைத்தேன். எந்தவொரு போட்டியாளருக்கும் சார்பாகவோ, எதிராகவோ நடந்துகொள்ளவில்லை. நான் எப்போதும் சரி என்று தெரியும் பக்கத்தில் நிற்கிறேன்.''

2020 திருமதி உலக அழகி கீரிடத்திற்காக போட்டியிடுவதற்கான தளத்தை ஏற்படுத்திய போட்டி ஏற்பாட்டாளர்கள் இந்த சம்பவத்தினால் எதிர்கொண்ட அசௌகரியங்களை நானும் எதிர்கொண்டுள்ளேன்.

உலக வாழ் மற்றும் இலங்கை வாழ்

கடந்த காலங்களிலும் தற்போதும் அழகு ராணிப் போட்டியில் பட்டம் பெற்ற உலகவாழ் மற்றும் இலங்கை வாழ் அழகுராணிகளுக்கு ஏற்பட்ட அதே அசௌகரியம் எனக்கும் ஏற்பட்டுள்ளது.

அனைத்து அழகு ராணிப் போட்டிகளுக்கும் தனித்தனியான விதிமுறைகள் உள்ளன.

நான் ஆரம்பம் முதலே நியாயமான தளத்திலும், அனைவருக்குமான நியாயமான விதிமுறைகளுக்கும் அமையே என்பதை குறிப்பிட வேண்டும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...