(இ.போ.ச) சொந்தமான பேருந்து ஒன்று, சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தியத்தலாவை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை 1.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் தியத்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்த தியத்தலாவை ஆதார மருத்துவமனையின் பதில் மருத்துவ அத்தியட்சகர் டொக்டர் டப்ளியூ. கே. எல். எம். வீரசேகர, விபத்தில் காயமடைந்த 42 பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் 8 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன் ஏனையோரின் நிலைமை வழமையாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


