Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

வெனிசுலாவில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

T

The Leader Desk

ஜூன் 27, 2026 • 5:58 AM

வெனிசுலாவில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காலை மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  • ரிச்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், அந்நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.
  • முன்னதாக, கடந்த புதன்கிழமை வெனிசுலாவில் ரிச்டர் அளவுகோலில் 7.5 ரிக்டர் அலகாகப் பதிவான மிகப்பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது.
  • இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி மரணமடைந்தோரின் எண்ணிக்கை 920 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
எழுத்து அளவு:

காலை மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரிச்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், அந்நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த புதன்கிழமை வெனிசுலாவில் ரிச்டர் அளவுகோலில் 7.5 ரிக்டர் அலகாகப் பதிவான மிகப்பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி மரணமடைந்தோரின் எண்ணிக்கை 920 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 243 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதேவேளை, 3,360க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் (Caracas) உட்பட வடக்கு பிராந்தியத்தில் உள்ள பல கட்டடங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன. காயமடைந்தவர்கள் தற்காலிக மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிலநடுக்கத்தை அடுத்து பலர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு, மீட்புப் பணிகளுக்காக சர்வதேச மீட்புக் குழுவினரும் தற்போது வெனிசுலாவைச் சென்றடைந்துள்ளனர்.

இதேவேளை, பிரதான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இதுவரை 214 பின்னதிர்வுகள் (Aftershocks) ஏற்பட்டுள்ளதாகவும், இதில் தலைநகருக்கு வடக்கே அமைந்துள்ள 'லா குவைரா' (La Guaira) பகுதியே மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அத்துடன், நிலநடுக்கத்தினால் அந்நாட்டின் 1,000க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...