இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுக்கான காரணங்கள்:
துப்பாக்கியைக் காட்டி மிரட்டியமை (Criminal Force), அத்துமீறி நுழைந்தமை மற்றும் குற்றவியல் ரீதியான அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் தெரிவித்தார்.
சம்பவத்தின் பின்னணி:
கடந்த 25 ஆம் திகதி யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் காணித் தகராறு ஒன்றின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா துப்பாக்கியுடன் பெண்ணொருவரை அச்சுறுத்தியுள்ளார்.
குறித்த காணியின் உரிமை தொடர்பாக நீதிவான் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தக் காணி தனக்குச் சொந்தமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறி வரும் நிலையில், மற்றுமொரு பெண்ணும் அந்தக் காணிக்கு உரிமை கோரி வருகிறார்.
சம்பவம் நடந்த 25ஆம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினர் காணியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு பெண்கள் அந்தக் காணியின் ஒரு பகுதி தமக்குச் சொந்தமானது என்று கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதம் முற்றியதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


