Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

பரபரக்கும் தமிழக அரசியல் களம்; திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்!

T

The Leader Desk

பிப்ரவரி 27, 2026 • 5:50 AM

பரபரக்கும் தமிழக அரசியல் களம்; திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நா.த.க., விஜய்யின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது.
  • ஆட்சியில் 3 முறை முதல்-அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.
  • ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.
எழுத்து அளவு:

நா.த.க., விஜய்யின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது.

தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.

இப்படி அரசியல் களம் ஒருபக்கம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க முன்னாள் முதல்-அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளில், ஆளும் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஓபிஎஸ் உடன் அவரது மகன் மற்றும் ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் சேகர்பாபு-ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒரே காரில் அண்ணா அறிவாலயம் வந்தது குறிப்பிடத்தக்கது.

திமுகவில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் அவர் மீண்டும் போடி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். அவருடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. உசிலம்பட்டி அய்யப்பனும் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.

3 முறை முதல்-அமைச்சர்
அ.தி.மு.க. ஆட்சியில் 3 முறை முதல்-அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பல சிக்கல்களை சந்தித்தது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் துணை முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். அதன்பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் அதிரடியாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், அய்யப்பன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்தனர்.

இதனையடுத்து அ.தி.மு.க.வை மீட்க சட்ட நடவடிக்கை எடுத்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜனதா ஆதரவுடன் சுயேச்சையாக களமிறங்கினார். ஓரளவு வாக்குகளை பெற்றிருந்தாலும் அவர் தோல்வி அடைந்தார்.

தி.மு.க.வில் ஆதரவாளர்கள் ஐக்கியம்
அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்கழகம் என்ற பெயரில் அமைப்பை நடத்தி வருகிறார். அவரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். பா.ஜனதாவும் கண்டுகொள்ளவில்லை.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியிலும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டை யன் த.வெ.க.விலும் சேர்ந்துவிட்டனர்.

எனவே ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதற்கிடையே அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் ஐக்கியமாகினர்.

மேலும் பண்ருட்டி ராமச்சந்திரன் தனிக்கட்சி தொடங்கி விட்டார். ஜே.சி.டி.பிரபாகர் த.வெ.க.வில் இணைந்துவிட்டார். இந்த நிலையில், பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ஓ.பன்னீசெல்வம் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...