Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

பழையதும் வேண்டாம், புதியதும் வேண்டாம்; ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் இன்று நீதி அமைச்சிடம் சமர்ப்பிப்பு!

T

The Leader Desk

பிப்ரவரி 27, 2026 • 5:40 AM

பழையதும் வேண்டாம், புதியதும் வேண்டாம்; ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் இன்று நீதி அமைச்சிடம் சமர்ப்பிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் இன்று நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
  • கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொது அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இக்கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
  • வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த மாபெரும் கையெழுத்துப் போராட்டத்தின் ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு, நேற்று யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவ்வமைப்பின் சேகரிப்பு மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
எழுத்து அளவு:

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் இன்று நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட இந்த மாபெரும் கையெழுத்துப் போராட்டத்தின் ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு, நேற்று யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவ்வமைப்பின் சேகரிப்பு மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில், பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.

கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொது அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இக்கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஊடக சந்திப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய கருத்துகள்:-

"அனைத்து அடக்குமுறைச் சட்டங்களும் இரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியுடனேயே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால், பழைய சட்டத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு, அரசைப் பாதுகாக்கும் புதிய சட்ட வரைவை முன்வைப்பது மக்கள் விரோதச் செயலாகும்."

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக அநியாயமாக பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களுக்குக் கூட அவர்கள் இழந்த காலத்திற்கான எவ்வித இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை."

"புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சாதாரண குடிமக்களின் கருத்துச் சுதந்திரம், எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை மற்றும் தனியுரிமை என்பன கடுமையாகப் பாதிக்கப்படும்."

இந்தச் சட்ட வரைவு குறித்து நீதி அமைச்சுக்குத் தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் நோக்கில், திரட்டப்பட்ட அனைத்து கையொப்பங்களும் இன்று அனுப்பி வைக்கப்படவுள்ளன என்று அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...