மத்தியில் விமான நிலையத்தில் இருந்து காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மும்பையில் இருந்து இன்று அதிகாலை 5.56 மணிக்கு வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான யுல்.எல் 142 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் அழைத்து வரப்பட்டிருந்தார்.
நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஜனித் மதுசங்க எனப்படும் பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.
பிணை வழங்கப்பட்டதை அடுத்து, அவர் சட்டத்தரணி ஒருவரின் காரிலேயே நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தார். இதனையடுத்து, அவர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்றுள்ளதுடன், அவர் இன்று அதிகாலை நாட்டுக்குக் அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் (Red Notices) இல்லாமலேயே, இதுவரை 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெஸீ' என அழைக்கப்படும் அருமாஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வா நாட்டை வந்தடைந்தமை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
2024ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட 29 சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
"தற்போதைய அரச பொறிமுறையின் ஊடாக 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட 29 சந்தேகநபர்களை அழைத்து வர முடிந்துள்ளது. அதேபோல், சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் இன்றியும் 14 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று (27) அழைத்து வரப்பட்ட சந்தேகநபருடன் சேர்த்து இந்த எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
"சிவப்பு அறிவித்தல் இல்லாத நபர்களை, அந்தந்த நாடுகளின் குடிவரவு, குடியகல்வு சட்ட விதிமீறல்கள் மற்றும் நாடு கடத்தல் நடவடிக்கைகள் ஊடாக, பொலிஸ் மா அதிபரின் நேரடித் தலையீட்டினால் அந்த நாடுகளுடனான பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் எம்மிடம ஒப்படைக்கச் செய்ய முடிந்தது. அத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக 89 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டில் இச்சந்தேகநபர்கள் அனைவரையும் நாட்டிற்கு அழைத்து வர உச்சபட்ச முயற்சிகளை எடுத்து வருகின்றோம்" என்றார்.
இந்தியாவில் கைதான பொலி லெசி; சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி கைதானதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு!
T
The Leader Desk
பிப்ரவரி 27, 2026 • 5:05 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மத்தியில் விமான நிலையத்தில் இருந்து காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
- இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
- மும்பையில் இருந்து இன்று அதிகாலை 5.56 மணிக்கு வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான யுல்.எல் 142 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் அழைத்து வரப்பட்டிருந்தார்.
- நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஜனித் மதுசங்க எனப்படும் பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

