நிலவியதாகக் கூறப்படும் நெருக்கமான தொடர்பு மற்றும் அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ அந்தப் பாடசாலையின் அதிபருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோக்கள் குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். அதிபரின் அறிக்கை கிடைத்தவுடன், அதன் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் செயலாளர் மேலும் கூறினார்.
அதிபரால் சமர்ப்பிக்கப்படும் அந்த அறிக்கை கிடைக்கும் வரை, சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் உட்பட எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
தற்போது, சம்பந்தப்பட்ட மாணவர், குறித்த ஆசிரியைகள் மற்றும் மாணவர் ஒருவரின் பெற்றோர் ஆகியோர் அடங்கிய பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


