பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கமைய, இரு பேருந்துகளிலும் பயணித்த சுமார் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 25 பேர் மாத்தறை பொது வைத்தியசாலையிலும், ஏனையோர் பத்திகம பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காலி மற்றும் அம்பாறைக்கு இடையில் பயணித்த தனியார் பேருந்தொன்றும், தங்காலை மற்றும் மாத்தறைக்கு இடையில் பயணித்த தனியார் பேருந்தொன்றும் இன்று (26) காலை 7.45 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்து காரணமாக தங்காலை - மாத்தறை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


