Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கட்டுப்பாட்டை மீறும் எபோலா தொற்று: மரணங்கள் 220ஆக உயர்வு;

T

The Leader Desk

மே 26, 2026 • 4:09 AM

கட்டுப்பாட்டை மீறும் எபோலா தொற்று: மரணங்கள் 220ஆக உயர்வு;  

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பு மற்றும் நிவாரண முயற்சிகளையும் மிஞ்சி அதிவேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசுஸ் (Tedros Adhanom Ghebreyesus) நேற்று (25) திங்கட்கிழமை கவலை வெளியிட்டுள்ளார்.
  • தற்போதைய உத்தியோகபூர்வ தரவுகளின்படி, எபோலா தொற்றினால் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்வடைந்துள்ளது.
  • அண்டை நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிஉயர் எச்சரிக்கை: காங்கோவின் அண்டை நாடான உகண்டாவில் (Uganda) இன்று மேலும் இரண்டு புதிய எபோலா நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு உறுதி செய்யப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது.
  • இதன் காரணமாக, காங்கோவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஏனைய அண்டை நாடுகளுக்கும் எபோலா பரவும் அதிஉயர் அவதானம் (High Risk) காணப்படுவதால், அந்த நாடுகள் உடனடியாக அவசரப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
எழுத்து அளவு:

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பு மற்றும் நிவாரண முயற்சிகளையும் மிஞ்சி அதிவேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசுஸ் (Tedros Adhanom Ghebreyesus) நேற்று (25) திங்கட்கிழமை கவலை வெளியிட்டுள்ளார்.

ஆபிரிக்க ஒன்றியத்தின் (African Union) அவசர இணையவழி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

தற்போதைய உத்தியோகபூர்வ தரவுகளின்படி, எபோலா தொற்றினால் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்வடைந்துள்ளது.

தொற்றைக் கண்டறிவதில் தாமதம்

பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தற்போது சுகாதாரப் பிரிவினர் தொற்றுப் பரவலுக்குப் பின்னால் ஓட வேண்டிய நிலை (Playing catch-up) ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர், நிலைமை சீரடைவதற்கு முன்னர் மேலும் மோசமடையக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.

நிலைமைகளை நேரில் ஆராய்வதற்காக, எபோலா தொற்றின் மையப்பகுதியாகக் கருதப்படும் காங்கோவிற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர சுகாதாரப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி சிக்வே இஹெக்வீசு (Chikwe Ihekweazu) உடன் இணைந்து, தாம் நாளை (26) செவ்வாய்க்கிழமை அவசரப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் ரெட்ரோஸ் தெரிவித்தார்.

அண்டை நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிஉயர் எச்சரிக்கை:

காங்கோவின் அண்டை நாடான உகண்டாவில் (Uganda) இன்று மேலும் இரண்டு புதிய எபோலா நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு உறுதி செய்யப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்துள்ளது.

இதன் காரணமாக, காங்கோவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஏனைய அண்டை நாடுகளுக்கும் எபோலா பரவும் அதிஉயர் அவதானம் (High Risk) காணப்படுவதால், அந்த நாடுகள் உடனடியாக அவசரப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

தடுப்பூசிகள் இல்லை; சர்வதேச ரீதியிலான அவசர நிலை பிரகடனம்!

உலகில் அரிதாகக் காணப்படும் 'புந்டிபுகியோ' (Bundibugyo) என்ற எபோலா வைரஸ் வீரியமே தற்பொழுது பரவி வருவதால், உலக சுகாதார ஸ்தாபனம் இந்நிலைமையை "சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொதுச் சுகாதார அவசர நிலை" (Public Health Emergency of International Concern) என உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இரண்டு பிரதான சவால்கள் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்:

  1. பாதுகாப்பற்ற சூழல்: தொற்று அதிகமாகக் காணப்படும் காங்கோவின் இதூரி (Ituri) மற்றும் வடக்கு கிவு (North Kivu) ஆகிய மாகாணங்களில் நிலவும் ஆயுதக் குழுக்களின் மோதல்கள் மற்றும் கடுமையான பாதுகாப்பற்ற தன்மை காரணமாகச் சுகாதாரப் பணியாளர்களால் அங்கு தடையின்றிப் பணியாற்ற முடியாமை.

  2. தடுப்பூசி பற்றாக்குறை: தற்பொழுது பரவி வரும் 'புන්டிபுகியோ' வைரஸ் வீரியத்திற்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் (Vaccines) இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படாமை.

இந்தக் கொடிய தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும், ஆபிரிக்க பிராந்தியத்திற்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்குவதற்கும் சர்வதேச நாடுகள் உடனடியாக முன்வர வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கட்டுப்பாட்டை மீறும் எபோலா தொற்று: மரணங்கள் 220ஆக உயர்வு; | Tamil Leader | We Lead the Nation