கொள்கை வட்டி வீதத்தை 8.75% ஆக அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
நேற்று (25) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபையின் விசேட கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 அடிப்படை புள்ளிகளால் அதிகரிப்பு
இதன்படி, கொள்கை வட்டி வீதமானது 100 அடிப்படை புள்ளிகளினால் (100 basis points / 1%) அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் நிலவி வரும் பொருளாதார, நிதி நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய சாத்தியமான பொருளாதார சவால்களை மிக ஆழமாக ஆராய்ந்த பின்னரே நாணயக் கொள்கைச் சபை இந்த அவசர முடிவிற்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
வட்டி வீதங்களின் அண்மைக்கால வரலாறு:
முன்னதாக, நடப்பு ஆண்டின் மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட நாணயக் கொள்காய்வு கூட்டத்தின் போது, நாட்டின் ஒருநாள் கொள்கை வட்டி வீதத்தை 7.75% ஆக எவ்வித மாற்றமுமின்றித் தொடர்ந்து பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்திருந்தது.
எனினும், அண்மைக் காலமாக டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் சந்தை நுகர்வுச் செலவினங்கள் அதிகரித்துள்ள பின்னணியில், பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக மார்ச் மாத நிலவரத்தை விட 1% இனால் வட்டி வீதத்தை உயர்த்த மத்திய வங்கி தற்பொழுது நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய வங்கியின் இந்த வட்டி வீத அதிகரிப்பு காரணமாக, வணிக வங்கிகளின் சந்தைக் கடன் வட்டி வீதங்களிலும் (Market Lending Rates) எதிர்வரும் நாட்களில் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்படலாம் என நிதித்துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


