தடுப்புப் பிரிவு (Epidemiology Unit) வெளியிட்டுள்ளது.
அனைத்துத் துறைசார் நிறுவனங்களுக்கும் இந்த வழிகாட்டி “மெனிங்ஜிட்டிஸ்” எனப்படும் மூளைக்காய்ச்சல் நோய் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும், அதனை மேலும் பரவாமல் தடுப்பதற்கும் தேவையான விசேட சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் (Guidelines) அடங்கிய ஆவணத்தைக் கொவசரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ், முதன்மை கொள்ளைநோய் தடுப்பு விசேட நிபுணர் டாக்டர் பாலித கருணாபேம தலைமையிலான மருத்துவ நிபுணர்கள் குழுவினால் இந்த விசேட அறிவுறுத்தல் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டி ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விபரங்கள்:
வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டலில் பின்வரும் விபரங்கள் விரிவாக உள்ளடக்கப்பட்டுள்ளன:
-
சாத்தியமான நோயறிகுறிகள், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் வகைப்படுத்தல்.
-
நோய் பரவும் முறைகள், சிகிச்சை மற்றும் மருத்துவ முகாமைத்துவம்.
-
பொதுச் சுகாதாரப் பழக்கவழக்கங்கள் மற்றும் பாடசாலைகளுக்கான விசேட அறிவுறுத்தல்கள்.
-
ஆய்வகப் பரிசோதனைக்கான மாதிரிகளைச் சேகரித்தல் (Samples Collection).
-
நிறுவன மற்றும் சமூக மட்டத்தில் தொற்றுப் பரவலைக் தடுக்கும் முறைகள்.
-
பொது விழாக்கள் மற்றும் மக்கள் கூடும் கூட்டங்களின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்.
பாடசாலை மாணவர்களிடையே தீவிரப் பரவல்; 7 நாட்களில் குணமாகும்!
இந்த மூளைக்காய்ச்சல் தொற்றானது பிரதானமாகப் பாடசாலை மாணவர்களிடையே மிக வேகமாகப் பரவி வருவதை அவதானிக்க முடிந்துள்ளதாகக் கொள்ளைநோய் தடுப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.
-
முக்கிய அறிகுறிகள்: கடுமையான காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி என்பன இந்நோயின் முதன்மை அறிகுறிகளாகும்.
-
குணமாகும் காலம்: இந்நோய் நிலைமைக்கு உரிய முறையில் சிகிச்சை பெறும் பட்சத்தில், 7 நாட்களுக்குள் நோயாளர்கள் முழுமையாகச் குணமடைய முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோய் பரவும் விதம் மற்றும் அறிகுறிகள் தோன்றும் காலம்:
-
தூய்மையற்ற நீர், உணவு மற்றும் கைகளைச் சரியாகச் சுத்தப்படுத்தாமல் உட்கொள்ளுதல் (Fecal-oral route) மூலமாக இந்நோய் பரவுகின்றது.
-
அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல் அல்லது தும்மலின் போது வெளிப்படும் உமிழ்நீர்த் துளிகள் (Droplets) மூலமாகவும், நெருக்கமான தொடர்புகளின் போது சுவாசத் தொகுதி வழியாகவும் (Respiratory system) இந்தத் தொற்று மற்றுமொருவருக்கு மிக எளிதாகப் பரவக்கூடும்.
-
இந்த வைரஸ் உடலுக்குள் சென்று 3 முதல் 7 நாட்களுக்குள் (Incubation Period) நோயறிகுறிகள் வெளியில் தென்பட ஆரம்பிக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொற்றிலிருந்து தப்பிக்க மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனைகள்:
மூளைக்காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும் பின்வரும் சுகாதாரப் பழக்கவழக்கங்களை உடனடியாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது:
-
கை கழுவுதல்: சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி கைகளை அடிக்கடி நன்றாகக் கழுவ வேண்டும்.
-
தும்மல் மற்றும் இருமல்: தும்மும் போது அல்லது இருமும் போது முழங்கையின் உட்பகுதியைப் பயன்படுத்தியோ அல்லது கைகுட்டை (Handkerchief) / திசுப் பேப்பரை (Tissue) பயன்படுத்தியோ வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும்.
-
தனிமைப்படுத்தல்: நோயறிகுறிகள் உள்ள நபர்களுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதைத் தவிர்த்தல் வேண்டும்.
-
காற்றோட்டம்: வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்குள் சுத்தமான காற்று வந்துபோகக் கூடிய வகையில் முறையான காற்றோட்ட வசதிகளை (Ventilation) உறுதி செய்ய வேண்டும்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாகாண மற்றும் பிராந்திய சுகாதாரச் சேவைப் பணிப்பாளர்கள், வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள், மாவட்ட சமூக மருத்துவ நிபுணர்கள் மற்றும் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரிகள் (MOH) உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் அனைவருக்கும் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு முதன்மை கொள்ளைநோய் தடுப்பு விசேட நிபுணர் டாக்டர் பாலித கருணாபேம அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.


