Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளுக்கு எதிரான 2 மனுக்களை நிராகரித்தது உயர்நீதிமன்றம்

T

The Leader Desk

பிப்ரவரி 26, 2026 • 8:42 PM

அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகளுக்கு எதிரான 2 மனுக்களை நிராகரித்தது உயர்நீதிமன்றம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒழுங்குவிதிகள், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகக் குறிப்பிட்டுத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
  • மனுக்கள் தொடர்பான சமர்ப்பணங்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், குறித்த மனுக்களை முன்னெடுத்துச் செல்வதற்கான அனுமதியை மறுத்ததுடன், அவற்றை ஆரம்பக்கட்டத்திலேயே தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
  • தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர் குமுதினி விக்ரமசிங்க மற்றும் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டன.
எழுத்து அளவு:

ஒழுங்குவிதிகள், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகக் குறிப்பிட்டுத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர் குமுதினி விக்ரமசிங்க மற்றும் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டன.

மனுக்கள் தொடர்பான சமர்ப்பணங்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், குறித்த மனுக்களை முன்னெடுத்துச் செல்வதற்கான அனுமதியை மறுத்ததுடன், அவற்றை ஆரம்பக்கட்டத்திலேயே தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கையில்; நாட்டில் நிலவும் அவசர நிலைமையைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதியினால் அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான அவசர காலங்களில் தீர்மானங்களை எடுப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படக் கூடாது எனவும் சுட்டிக்காட்டினார்.

மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான சுரேன் பெர்னாண்டோ மற்றும் திஷ்ய வேரகொடை ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...