Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அனர்த்த நிவாரண உத்தியோகத்தர்கள் நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

T

The Leader Desk

பிப்ரவரி 26, 2026 • 8:37 PM

அனர்த்த நிவாரண உத்தியோகத்தர்கள் நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பணிகளிலிருந்து விலகி, தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன.
  • ‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாரிய அனர்த்தம் இடம்பெற்று 93 நாட்கள் கடந்துள்ள போதிலும், அந்தக்காலம் முழுவதும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களும் கிராம உத்தியோகத்தர்களும் இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளதாக அச்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
  • அரசாங்கத்திற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையில் பிரதான ஒருங்கிணைப்பாளர்களாக இவர்கள் செயற்பட்டு வந்துள்ளனர்.
எழுத்து அளவு:

பணிகளிலிருந்து விலகி, தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன.

அனைத்து இலங்கை அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் சங்கம், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் கிராம உத்தியோகத்தர் சங்கங்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாரிய அனர்த்தம் இடம்பெற்று 93 நாட்கள் கடந்துள்ள போதிலும், அந்தக்காலம் முழுவதும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களும் கிராம உத்தியோகத்தர்களும் இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளதாக அச்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அரசாங்கத்திற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையில் பிரதான ஒருங்கிணைப்பாளர்களாக இவர்கள் செயற்பட்டு வந்துள்ளனர்.

அதேபோல், அனர்த்தம் தொடர்பான இழப்பீடுகள் மற்றும் கொடுப்பனவுகளுக்கான மதிப்பீடுகளைத் தயாரிப்பதில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் களமட்டத்தில் விசேட பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம் ஆற்றியுள்ள இந்த பாரிய சேவைக்கு ஈடாக நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதன் காரணமாகவே, இந்த கூட்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அச்சங்கங்கள் மேலும் வலியுறுத்தியுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அனர்த்த நிவாரண உத்தியோகத்தர்கள் நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கை! | Tamil Leader | We Lead the Nation