சினிமா நட்சத்திரங்களான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விஜய் தேவரகொண்டா, கர்நாடக மாநிலம் கொடகு மாவட்டத்தை சேர்ந்த ரஷ்மிகா மந்தனா இருவரும், திருமண பந்தத்தில் இன்று இணைகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காலை விஜய் தேவரகொண்டாவின் குடும்ப வழக்கப்படி திருமணம் நடக்கிறதாம். அதாவது தெலுங்கு முறைப்படி திருமணம் நடக்கும்.
இதையடுத்து மாலையில் கொடகு மக்களின் முறைப்படி மீண்டும் ஒரு முறை திருமணம் நடத்துகிறார்களாம். இரண்டு பேரின் கலாசாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவே இப்படி இரண்டு முறை திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் மிகவும் நெருக்கமாக உள்ள மொத்தமே 50 பேர் தான் கலந்து கொள்கிறார்களாம். திருமண வரவேற்பு மார்ச் 4ஆம் திகதி ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது.
இந்நிலையில், இந்த தம்பதிக்கு திரை பிரபலங்கள், இரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில்,
“பெப்ரவரி 26, 2026 அன்று நடைபெறும் விஜய் மற்றும் ரஷ்மிகாவின் திருமணத்திற்கு அழைக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மகிழ்ச்சியான மற்றும் புனிதமான தருணத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா குடும்பங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
“விஜய் மற்றும் ராஷ்மிகா இருவரும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய, அழகான அத்தியாயத்தை தொடங்குகின்றனர். இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு தெய்வீக ஸ்கிரிப்டின் அத்தியாயம். மேலும், வெள்ளித்திரையில் அவர்கள் உருவாக்கிய மாயாஜாலத்தை மிஞ்சும் என நம்புகிறேன்.
“சிந்தனையுடனும் அன்புடனும், இருவரும் அவர்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளட்டும். இந்த முக்கியமான தருணத்தில் தம்பதியினருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும்” என்றுள்ளார்.



